ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்த சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சிம்பு கைவசம் கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கும் கொரோனா குமார் மற்றும் ஹன்சிகாவுடன் மஹா போன்ற படங்கள் உள்ளன. இவ்வாறு படு பிசியாக நடித்து வரும் சிம்பு, தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

அதன்படி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலி ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.

இப்படம் மூலம் நடிகர் சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் மூன்றாவது முறையாக இணைய உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே வாலு, மஹா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் மஹா திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.