சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறியுள்ளது. தற்போது வரை வசூலில் கொஞ்சமும் குறையாமல் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் இன்று ஒரு பேட்டியில் அச்சம் என்பது மடமையடா வெற்றி மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. எனக்கு நம்பர் 1 நம்பர் 2 என்ற பெயர் வாங்கும் ஆசையில்லாமல் தற்போது ரசிகர்களுக்காக படம் பண்ணவேண்டும் என்று எண்ணம் தான் உள்ளது என்றார்.

மேலும் நயன்- விக்னேஷ் சிவன் கல்யாணம் அடுத்த வருடம் நடக்கவுள்ளது என்று பேச்சு அடிபடுகிறது, நீங்கள் போவீர்களா என்ற கேள்விக்கு "என்ன மாட்டி விடாம போக மாட்டிங்க போல , நயன் - விக்கி இரண்டு பேருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், அவர்கள் கூப்பிட்டால் கண்டிப்பாக போவேன் என்றார்.