simbu spone feeding for simbu

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய் என நான்கு நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. ஒரு நடிகரை கமிட் செய்து நடிக்க வைப்பதே... மிகப்பெரிய விஷயாமாக இருக்கும் நிலையில் அந்த வேலையை அசால்ட்டாக செய்து வருகிறார் மணிரத்னம். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நான்கு நடிகர்களையும் ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்டுள்ள காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியில் தலையில் காயங்களுடன்... நடிகர் விஜய்சேதுபதிக்கு சிம்பு உணவு ஊட்டிவிட்டதாக ஒரு புகைப்படம் வெளியாக வைரலாகி வருகிறது. சிம்புவின் அன்பான குணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படம் உள்ளது என கூறி சிம்பு ரசிகர்கள் பலர் இதனை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

4 நடிகர்களுடன், மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.