வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தின் படு தோல்வியைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, கன்னடத்தில் வெளியான மப்டி  தமிழில் ரீமேக் படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் மாஸ் லுக்  வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்து மெகா ஹிட் அடித்த கேங்ஸ்டர் ரோலில் ய்ங் சூப்பர்ஸ்டார்  சிம்பு நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய அதே நர்த்தன் தான் இந்த படத்தையும் இயக்கிவருகிறார். இன்னும் டைட்டியல் வைக்காத இந்த படத்திற்கு புரொடக்ஷன் நம்பர் 20 என தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. 

சிம்பு மற்றும் கூடவே வரும் சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே  நடித்து வருவதால், பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள போட்டோவில், வயதான கேங்ஸ்டராக செம கெத்தாக லுங்கி அணிந்து சிம்பு உட்கார்ந்திருக்கும் லுக் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.  சுரேஷ் காமாட்சி தயாரித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வரவிருக்கும் மாநாடு திரைப்படத்திலும் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 25 ஆம் தேதி தொடங்க உள்ளது.