நடிகர், சிம்பு "செக்கச் சிவந்த வானம்" படத்திற்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி,  இயக்கத்தில் 'வந்த ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டும்,  ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் இதுகுறித்து சிம்பு வீடியோ ஒன்றை பேசி அதனை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது.... "வந்தால் ராஜாவாதான் வருவேன்" படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 1 ஆம்,  தேதி ரிலீசாகிறது. புத்தாண்டு பொங்கலையொட்டி,  என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

"பொதுவாக ஒரு நடிகர், படம் வெளியாகும் போது சில இடங்களில் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கிறார்கள். அதிக பணம் கொடுத்து படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை தியேட்டரில் டிக்கெட்டின் சரியான விலையை, கொடுத்து படம் பார்த்தால் போதும்.

அதேபோல், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து அன்பை வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா, தான் உங்களுக்கு எல்லாமே.  இந்த தடவை பால் அபிஷேகம் செய்வதற்கு பதிலாக உங்க அம்மாவுக்கு ஒரு புடவை. அப்பாவுக்கு ஒரு ஷர்ட்.  தம்பி தங்கைக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுங்கள். 

அப்படி உங்கள் அம்மாவுக்கு புடவை எடுத்துக் கொடுத்தது ஒரு போட்டோவை நீங்கள் பதிவிட்டால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவுமில்லை. பேனர் கட் அவுட் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான் படத்தில் நடித்து உங்கள் பெயரை காப்பாற்றுகிறேன் எனக்காக நீங்கள் இதை செய்யுங்கள் இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.  இதற்கு சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்து வருகிறது.