Asianet News TamilAsianet News Tamil

பணமோ... வார்த்தைகளோ... ஈடுசெய்ய முடியாது! கண்களில் நீர் மூடிக்கொண்டு வருகிறது... ஆதங்கப்பட்ட சிம்பு!

நடிகர் கமலஹாசன் நடித்து வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்ததில் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய மூன்று பேர் பலியாகினர். 9பேர் படுகாயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர சம்பவத்திற்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். 
 
simbu release the statement for indian 2 accident
Author
Chennai, First Published Feb 22, 2020, 5:58 PM IST

நடிகர் கமலஹாசன் நடித்து வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்ததில் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய மூன்று பேர் பலியாகினர். 9பேர் படுகாயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர சம்பவத்திற்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 விபத்து குறித்து, தன்னுடைய ஆதங்கத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு.

simbu release the statement for indian 2 accident

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

simbu release the statement for indian 2 accident

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

simbu release the statement for indian 2 accident

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios