’இப்பல்லாம் ஊருக்குள்ள என்ன ஒரு பய மதிக்கிறதில்ல’ என்ற 16 வயதினிலே’ சப்பாணி ரேஞ்சுக்கு வந்துவிட்டது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அதிலும் தலைவர்  விஷாலை கைப்புள்ள ரேஞ்சுக்கே கையாள்கிறார்கள் பலரும்.

இந்நிலையில் பொங்கலுக்கு வரவிருக்கும் சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போட்டிருப்பதாக நிச்சயமற்ற தகவல்கள் நடமாடிவருகின்றன.

சும்மா இருப்பாரா சிம்பு. ஏற்கனவே ‘2.0’ படத்தோடு தனது ‘வ.ரா.வ’ ட்ரெயிலரை வெளியிடப்போவதாக அறிவித்துள்ள சிம்பு விரைவில் படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றையும் வெளியிட இருப்பதாகத் தெரிகிறது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன. இப்பாடலில் விஷாலை பெர்சனலாக வெளுத்திருக்கிறாராம் சிம்பு.

பெர்சனல் என்றால் நள்ளிரவில் நடிகை வீட்டுக்கு எகிறியது எல்லாம் வருமா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.