சொன்னபடி ஐந்து மணிக்கு மவுனப்போராட்டம் நடத்திய சிம்பு "எங்களை வீணாக சீண்டாதீர்கள்.. இது ஆரம்பம்தான்" என்று பேசினார்.
தமிழுக்காகவும், ஜல்லிக்கட்டு நடத்தணும் என்பதற்காகவும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலம்பரசன்னா படத்துல நடிப்பான்.. போவான் வருவான்… அப்டினு இல்ல. படத்துல மட்டும் ஹீரோ இல்ல. வாழ்க்கைல பிரச்னை வந்தா உண்மையா இறங்கி வரணும். என் பின்னாடி நீங்க வர வேணாம்.
நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வர்றேன். நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன். இவ்வளவு அருமையான ரசிகர்களை எனக்கு கொடுத்ததுக்கு. போகும்போது எதையும் எடுத்துட்டு போகலடா… போகவும் முடியாதுடா… கொடுத்துட்டு போங்கடா… இது ஆரம்பம்தான். நடந்தே ஆகணும். இது ஆரம்ப போராட்டம்தான். தேவையில்லாம எங்கள தொந்தரவு செய்யாதீங்க. போராட்டத்துக்கு வந்த எல்லாருக்கும் நன்றி வணக்கம்.
![]()
