இந்த செய்திக்காக சிவகாசி வரை போய் ஒரு டென் தவுசண்ட் வாலா வெடி வெடித்தால் கூட தகும். தனக்கு எதிராக பஞ்சாயத்து கிளப்பிய அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி ‘காத்திருப்பதால்’ சென்னைக்குத் திரும்புவதற்கு அஞ்சியபடி தாய்லாந்திலேயே தலைமறைவாக இருக்கிறாராம் நடிகர் சிம்பு.

தன்னை வைத்துப்படம் எடுத்த தயாரிப்பாளர்களை தொடர்ந்து படு குழியில் தள்ளி வந்த ‘மாநாடு’படத்திலிருந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியால் துணிந்து தூக்கி அடிக்கப்பட்ட பிறகு அதிகம் அலசித் தொங்கவிடப்பட்டார். குறிப்பாக அவர் சனி,ஞாயிறுகளில் மேக் அப் போடுவதில்லை.படப்பிடிப்புகளிலிருந்து இஷ்டப்பட்ட நேரத்துக்கு இயக்குநர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விடுவார் போன்ற தகவல்கள் வெளிச்சத்து வந்தன. குறிப்பாக இம்முறை அவரால் பாதிக்கப்பட்ட, அவருக்கு அட்வான்ஸ் தந்துவிட்டுக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் சிம்புவுக்கு கட்டம் கட்ட ஒன்றாகக் கைகோர்த்தனர்.

இந்நிலையில் உற்சாகக்கொண்டாட்டத்துக்காக, தயாரிப்பாளர்களின் அட்வான்ஸ் பணத்தைக் கரைக்க தாய்லாந்து போயிருந்த சிம்பு, தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களெல்லாம் ஒன்று கூடிக் காத்திருப்பதை கேள்விப்பட்டு அதிர்ந்துவிட்டாராம். ஏற்கனவே மீடியாக்களில் தன்னை வழக்கத்தை விட அதிகமாக அசிங்கப்படுத்தி புது அட்வான்ஸ் வாங்கவிடாமல் செய்ததோடு பஞ்சாயத்துக்கு வேறு காத்திருக்கிறார்கள் என்பதை தனது அல்லக்கைகள் மூலம் தெரிந்துகொண்ட அவர் சென்னை திரும்புவதை கடந்த 5ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குத் தள்ளி தற்போது 20ம் தேதிக்கு என்று மாற்றி அமைத்திருக்கிறாராம். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கும் நாளில் அப்படியெ இழுத்து வந்து ஏதாவது ஒரு மரத்தில் கட்டி வைத்துப் பஞ்சாயத்துப் பண்ணும் அளவுக்கு வெறியோடு இருக்கிறார்கள் அவரது தயாரிப்பாளர்கள்.