சிம்பு

நடிகர் சிம்புவை சர்ச்சைகளும் பிரச்சனைகளும் விடாமல் துரத்துகிறது.காதல் விஷயமாக இருந்தாலும் சரி படம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் எதுவும் சிம்புவுக்கு செட் ஆகவில்லை.

ரெட் கார்டு

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த AAA படம் கடுமையான தோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது.தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்ட் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் கூட சிம்பு ஆதிக்கிடம் வருத்தபட்ட ஒரு ஆடியோ வெளியானது.

கட்டப்பஞ்சாயத்து

இந்நிலையில் சிம்புவை ஒழித்துக்கட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ஆர் கூறியுள்ளார்.
மேலும் AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், வீட்டிற்கு ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

செக்கச் சிவந்த வானம்

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவர் என்ஜினியராக நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இடையூறு

இந்நிலையில் ஒரு பேட்டியில் மணிரத்னத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தினர் எனக்கு இடையூறு செய்கின்றனர்.அந்த படத்தை ஏன் நிறுத்த முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சிம்பு கூறியுள்ளார்.