சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென்துருவதில்  மென்மையாக தரையிறங்கம் செய்யப்பட்டுள்ள முதல் நாடு என்கிற சாதனையை படைத்து, இந்தியாவின் பெருமையை பறைசாற்றியுள்ளது. இதற்க்கு பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சுமார் 40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக தரையிறக்கப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்தார். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

ஓவ்வொரு இந்தியனையும் பெருமை பட வைத்துள்ள இந்த நிகழ்வு குறித்து... பிரபலங்கள் பெருமையோடு, இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து கூறி போட்டுள்ள பதிவுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

நடிகை குஷ்பு போட்டுள்ள பதிவில்... "எனது டிபியில் இந்த படம் இருக்கும்.. ஒரு இந்தியனாக, இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் என்றென்றும் பதிந்து இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் மாதவன், "இந்த சாதனையை விவரிக்க வார்த்தைகள் போதாது ஜெய் ஹிந்த். என் இதயம் பெருமிதம் கொள்கிறது. நான் புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் அல்லு அர்ஜுன், "வாழ்த்துக்கள் இஸ்ரோ. விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம்! சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தைத் தொட்டது, இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டிய முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியது! ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் ரவி தேஜா போட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள் இஸ்ரோ... சந்திரயான் - 3 இன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தை எட்டியுள்ளது. உங்களின் புத்திசாலித்தனமும் அயராத முயற்சிகளும் நம் தேசத்தின் நம்பிக்கை மற்றும் பெருமையின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கின்றன என கூறியுள்ளார். 

Scroll to load tweet…

நடிகர் சிம்பு, "பெரிய வாழ்த்துக்கள் இஸ்ரோ நிலவில் சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நாள் ஒவ்வொரு இந்தியனுக்கும் வரலாற்று சிறப்புமிக்கது, நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் நாம் அடைய முடியும் என்ற பெருமை மற்றும் நம்பிக்கையின் தருணம். என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுத் தந்த விஞ்ஞானி வீரமுத்து வேல் அவர்களுக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் Proud of u ISRO.” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் ஷாருகான், அனைத்துஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும்... இந்தியாவைப் பெருமைப்படுத்திய ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். சந்திரயான் - -3 வெற்றிகரமாக நிலவில் மென்மையாக தரையிறங்கியது. என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது..."சந்திரயான்-3 இன் வரவிருக்கும் சந்திர ரோவர், நமது தேசிய சின்னமான சாரநாத்திலிருந்து அசோகரின் சிங்க தலைநகரான சந்திர மேற்பரப்பில் இஸ்ரோவுடன் இணைந்து அதன் அடையாளத்தை விட்டுச்செல்லும். இந்தியாவின் சந்திர மரபு மற்றும் இருப்பை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்று தருணம். என பதிவிட்டுள்ளார்".

Scroll to load tweet…

நடிகர் மகேஷ் பாபு போட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சந்திரனின் தென் துருவத்தை நோக்கி ஒரு வெற்றிப் பயணம்! சந்திரயான் - 3 இன் நேர்த்தியான தரையிறக்கம் இந்தியாவின் அறிவியல் மேன்மைக்கும், விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சலுக்கும் ஒரு சான்றாகும்! வானமே எல்லை இல்லை!! வாழ்த்துக்கள் இஸ்ரோ குழு என கூறியுள்ளார்".

Scroll to load tweet…

நடிகர் சூர்யா சந்திரயான் - 3 பெருமை பட வேண்டிய தருணம் என ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் ஜெயம் ரவி, சந்திரயான் - 3 தேசப் பெருமையின் கலங்கரை விளக்கத்துடன் இந்தியாவின் பிரபஞ்ச முன்னேற்றங்களுக்கு நன்றி என ட்விட் போட்டுள்ளார்.

Scroll to load tweet…