நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. ஆரம்பத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட படம், பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் "மாநாடு" படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதில் மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ள தேதி மற்றும்  யாரெல்லாம் அந்த படத்தில் நடிக்க உள்ளார்கள் போன்ற தகவல்கள் பொங்கல் அன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இப்போதைக்கு இந்த படத்தில் பாரதிராஜா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனக்கூறப்படுகிறது. அதேபோல கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு சிம்புவை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ள அவரது ரசிகர்கள் இந்த அறிவிப்பால் செம்ம குஷியில் உள்ளனர்.