கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் சென்சார் செய்யப்பட்டு U சான்றிதழும் வழங்கப்பட்டது.

தற்போது வரும் வாரம் 11 ம் தேதி வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

ஆனால் பிரபு, கமல்ஹாசன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள மீன்குழம்பும் மண்பானையும் படம் வெளிவர இருப்பதால் சிம்பு படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.

படக்குழு சற்று தயக்கத்தில் உள்ளதாம். ஏற்கனவே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டு, முதலில் ஹீரோயினாக நடித்த பல்லவி திடீரென்று நடிக்க மறுத்து பல பிரச்சனைகளுக்கு நடுவே தற்போது படம் வெளியாக போகிற நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது. எனவே மீண்டும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார் சிம்பு.