இந்த வருடம் வெளியான திரைப்படங்களில், நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியையும், பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான வசூல் சாதனையையும் நிகழ்த்திய திரைப்படம் 'கோலமாவு கோகிலா'.

இந்த படத்தை தொடர்ந்து 4  கோடியாக இருந்த தன்னுடைய சம்பளத்தை 6  கோடியாக உயர்த்தி விட்டார் நயன்தாரா.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நெல்சனின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். இந்த செய்தி அறிந்ததும் முதல் ஆளாக நடிகர் சிம்பு, நெல்சனின்  வீட்டிற்கு சென்று, அவருடைய தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின் சில மணிநேரம் அங்கேயே இருந்து நெல்சனுக்கு ஆறுதல் கூறினார். 

நெல்சன், ஏற்கனவே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை துவங்கினார். இந்த திரைப்படம் பாதியில் நின்ற பின் சில வருடம் கழித்து, நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா' படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைத்தது. 

'கோலமாவு கோகிலா' என்கிற படத்தின் மூலம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் நெல்சனை நயன்தாரா கண்டு கொள்ள வில்லை என்றாலும் சிம்பு முதல் ஆளாக முந்தி சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.