நடிகர் சிம்பு தன்னுடைய ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று மாலை  5 மணிக்கு கருப்பு ஆடை அணிந்து மௌன போராட்டம் நடத்த போவதாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் .

மேலும் தனக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து வரும் தமிழ் மக்கள் இந்த உரிமை போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த போராட்டத்திற்கு பல ரசிகர்கள் தற்போது ஆதரவு கொடுத்து வரும் நிலையில் , அவரது வீட்டின் முன் சிம்புவிற்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் இந்த போராட்டத்தில் அவரது குடுபத்தினர் அனைவரும் கருப்பு உடை அணைத்து கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அதே போல இயக்குனர் ராம் போன்றவர்களும் இதில் காலத்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு  தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.