நடிகர் சிம்பு என்றாலே முதலில் தோன்றுவது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நாயகன் என்பது தான். அதற்கு காரணம் அவர் மனதில் பட்டத்தை உடனுக்குடன் பேசுவதுதான்.
அதே போல நிறைய கிசுகிசு மற்றும் காதல் லீலைகளிலும் சிக்கியதும் பரவலாக இவர் பெயர் கொஞ்சம் பஞ்சர் ஆனதிற்கான காரணம்.
இப்படி எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் இந்த நாயகன் பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறாராம்.
இதே போல் சமீபத்தில் படப்பிடிப்பு குழுவில் வேலை செய்த துணை இயக்குனருக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவனைக்கு பணம் செலுத்த 50,000 பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார் அந்த துணை இயக்குனர்.
இதை எப்படியோ தெரிந்துக்கொண்ட சிம்பு, உடனே தன் நண்பர் மூலம் பணத்தை கொடுத்து மருத்துவமனை பில்லை செட்டி செய்துள்ளார்.
இந்த செய்தி தற்போது அவரது நண்பர் மூலம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கஷ்டம்னு தெரிந்தால் கண்டிப்பாக உதவும் மனம் கொண்டவர் சிம்பு என செய்து காண்பித்துள்ளார் .
