simbu have not interest to acting movies
நடிகர் சிம்பு நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' இந்த படத்தை 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மேலும் தயாரிப்பாளர் மைக்கில் ராயப்பன் தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடித்திருந்ததால் அனைவர் மத்தியிலும் இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் தயாரிப்பாளர் மைக்கில் ராயப்பனனுக்கு 18 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.


நானும் அவரது பேச்சை நம்பி படத்தை ஆரம்பித்தேன், ஆனால் அவர் கூறியபடி நடந்துக்கொள்ள வில்லை... அவரிடம் பேச வீட்டிற்கு சென்றபோது தன்னை 5 மணி நேரம் காக்க வைத்தார்.
பின் படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு அவர் படபிடிப்பில் கலந்துகொண்டாலும் சரியாக ஒத்துழைப்பு தராமல் படத்தையே கெடுத்துவிட்டார். இதனால் தற்போது நஷ்டத்தை சந்தித்து கடனாளியாக நான் மாறியுள்ளேன்... கடன் கொடுத்தவர்களுக்கு கூட பதில் சொல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறேன் என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் சிம்புவிற்கு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை, தனக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் கூறுவார் என மிகவும் கோபமாக தெரிவித்துள்ளார்.
