சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் மஹா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு, 'வாலு' படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். பின் இருவருமே திரையுலகத்தில் கவனம் செலுத்த துவங்கினர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்  நடிகை ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்து வரும் 'மகா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் சிம்பு . 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.  இருவரும் ஜீப்பில் அமர்ந்து நடிக்கும் காட்சியின் வீடியோ  ஒன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.  இயக்குனர் ஜமீல் இயக்கும் இந்தப்படத்தில்,  தம்பி ராமையா, கருணாகரன், சாய சிங், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வீடியோ: