நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியாவின் குழந்தை ஜோசனுக்கு இன்று முதலாவது பிறந்த நாள். இதனால் தன்னுடைய மருமகனின் பிறந்த நாளுக்காக இன்று ஹைதராபாத் சென்றுள்ளார் சிம்பு.

தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் இவர், தன்னுடைய மருமகனின் பிறந்த நாள் பார்ட்டியில்கலந்துக்கொள்ள இன்று ஹைதராபாத் பறந்துள்ளார். 

சிம்புவிற்கு அவருடைய தங்கையை மிகவும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் அவருடைய மருமகன் ஜோசனையும் மிகவும் பிடிக்குமாம். இவர் என்ன கவலையில் இருந்தாலும் ஜோசன் முகத்தை பார்த்ததும் அந்த கவலை பஞ்சாக பறந்து இவரும் குழந்தையாக மாறி விளையாட துவங்கி விடுவாராம். 

இன்று முதல் பிறந்த நாள் கொண்டாடும் ஜோசனுக்கு தாய் மாமா என்ற முறையில் சிம்பு பல பரிசுகள் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.