நடிகர் சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் கூட்டணியில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தமிழன் பாட்டு' என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சிம்புவின் 46வது படமான 'ஈஸ்வரன்' முற்றிலும் கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ளது. இதற்காக சிம்புவும் தனது உடல் எடையை கடினமாக முயன்று கணிசமாக குறைத்துள்ளார். அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற இடங்களில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொண்ட நாள் முதலே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கசக்க ஆர்வம் ஏற்பட்டது.  ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவரை காண பல ரசிகர்கள் குவிந்தனர். 

பல்வேறு பிரச்சனைகளை கடந்து, ஷூட்டிங் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை பொங்கல் தினத்தை முன்னிட்டு பட குழு வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது, 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தமிழன் பாட்டு' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள அந்த பாடம் இதோ...