கடந்த சில நாட்களாகவே சிம்பு ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடித்த காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடுக்காட்டில் லுங்கியை தூக்கி கட்டிக்கொண்டு சிம்பு,  மரக்கிளையில் தொங்கும் பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் போடுவது போன்ற காட்சிகள் தான் அது. இந்த காட்சி வைரலான மறு கணமே சிம்பு பாம்பை துன்புறுத்திவிட்டார் என்றும், உரிய அனுமதி பெறாமல் உயிருடன் பாம்பை பயன்படுத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின. 

இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால், சட்டப்பிரிவு 1972ன் படி சிம்பு செய்தது குற்றம் என வன உயிரின ஆர்வலர்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் இதுகுறித்து நேற்று “ஈஸ்வரன் படத்தில் பாம்புகளை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றும், பாம்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கவில்லை” என்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் விளக்கமளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

இந்நிலையில் சோசியல் மீடியாவில் வைரலான அந்த வீடியோ குறித்து இயக்குநர் சுசீந்திரன் மற்றும் மாதவ் மீடியா நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு  மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. 

 

இதையும் படிங்க: அண்ணனுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு.. சைலண்டாக தம்பிக்கு ‘ஓ.கே’ சொன்ன சாய் பல்லவி...!

கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம். இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டிதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.