Asianet News TamilAsianet News Tamil

நேற்று வரை என்னிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தாரே?.... கே.வி.ஆனந்த் மரணத்தால் மீளாமுடியாத வருத்தத்தில் சிம்பு!

நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

Simbu condolence to KV anand death
Author
Chennai, First Published Apr 30, 2021, 1:14 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், வெற்றி இயக்குநருமான கே.வி.ஆனந்த் இன்று காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 24ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தால் உடல் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

Simbu condolence to KV anand death

கே.வி.ஆனந்தின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர் பலரும் தங்களுடைய சோகத்தை இரங்கலாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். தனக்காக கதை ரெடி செய்து, அதற்காக நேற்று வரை தன்னுடன் தொடர்பில் இருந்த கே.விஆனந்த் திடீரென இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக நடிகர் சிம்பு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.  தனக்காக கதை ரெடி செய்து, அதற்காக நேற்று வரை தன்னுடன் தொடர்பில் இருந்த கே.விஆனந்த் திடீரென இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக நடிகர் சிம்பு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.

Simbu condolence to KV anand death

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

Simbu condolence to KV anand death

பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios