மாதவன்

சர்ச்சையும் சிம்புவும் ஒரு தாய் பிள்ளைகள் போல.சிம்பு சும்மா இருந்தாலும் அவரை சுற்றி பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.சமீபத்தில் கூட விடிவி இரண்டாம் பாகத்திலிருந்து சிம்புவை தூக்கி விட்டு மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளார் கௌதம் மேனன்.அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பின் போது சிம்பு கொடுத்த டார்ச்சரால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

AAA

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த AAA படம் பெரும் தோல்வியடைந்தது. இந்த படம் நஷ்டம் அடைந்ததற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் அளித்தார்.மேலும் சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

கடினம்

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்பு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.சிம்பு பழகுவதற்கு இனிமையானவர்.ஆனால் அவரோடு பணிபுரிவது கடினம்.எனக்கு உன்னை விட அனுபவம் அதிகம்.இப்படி செய்தால் சரியாக வரும் என்றும் சிம்பு கூறும் போது, எதிர்த்து பேசினால் படப்பிடிப்பே நடக்காது என்று தெரிவித்தார்.

மன்னிப்பு

சிம்புவின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல்கள் வந்தன. இதையடுத்து படம் ஓடாத்தற்கு தான் காரணம் என்று மன்னிப்பு கேட்பதாக சிம்பு தெரிவித்தார்.

ஆடியோ

இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் சிம்பு மீது  வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக சிம்பு இயக்குனர் ஆதிக்குடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

கஷ்டம்

அதில் கூடவே இருந்த நீயே இப்படி பேசினது ரொம்ப கஷ்டமா இருக்கு.வேற யார் அப்படி சொன்னாலும் பிரச்சனை இல்லை.உனக்காக தான் நான் தப்பு பண்ணேனு மன்னிப்பு கேட்டேன்.


நீயே இப்படி பேசலாமா

பாத்ரூம்ல  உட்கார்ந்து டப்பிங் பேசினேன் பேசியிருக்கீங்க ஸ்கிரிப்டை வாங்கினேன்னுலாம் சொல்லியிருக்கீங்க யார் என்ன சொன்னாலும் என்ன பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா என்று மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.கடைசியில் பிரச்சனையை விடு நீ இப்படி பண்ணது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறி பேச்சை முடித்து விட்டார்.

இந்த ஆடியோ வெளியாகி கோலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வருகிறது.