'வந்தா ராஜாவாதான்', வருவேன் படத்தை அடுத்து,  சிம்பு 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணாவை நடிக்க வைக்க படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.

இதுபற்றி அறிந்த கதாநாயகன் சிம்பு,  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் புது ஐடியா ஒன்றை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.  அதாவது '96 ' படத்திற்குப்பின் த்ரிஷா மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால் த்ரிஷாவையே 'மாநாடு' படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளாராம்.

எனவே சிம்புவின் 'மாநாடு' படத்தில் நடிக்க இருப்பது ராஷிகண்ணாவா அல்லது த்ரிஷாவா என ரசிகர்கள் மத்தியில் புது குழப்பம் ஏற்பட்டுள்ளது.  யாராக இருந்தாலும்  விரைவில் தெரியவரும் அதுவரை பொறுத்திருப்போம்.

நயன்தாராவின் துணிச்சல் முடிவு:

திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பல் வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே வருகிறது.  புது படங்கள் ரிலீஸ் ஆகும் அதே தேதியிலேயே தமிழ் ராக்கர்ஸ்,  இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்டு பட அதிபர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் பட உலகின் நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் நயன்தாரா, சொந்த படம் தயாரிப்பது,  படங்களை விநியோகம் செய்வது  போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.  படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகைகளை திரையுலகை சேர்ந்த பிரபல கதாநாயகர்கள் முதலீடு செய்வது போல்,  நயன்தாராவும் தயாரிப்பு மற்றும் பட விநியோகம் செய்வது என துணிச்சலான முடிவு எடுத்து முதலீடு செய்து வருகிறார். 

தற்போது நயன்தாரா அவருடைய பெயரில் இந்த வேலைகளை செய்யவில்லை என்றாலும், அவருடைய மானேஜர் மற்றும் காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் பெயரில் நயன்தாரா பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.