நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக, தன்னுடைய உடல் எடையை குறைக்க லண்டன் சென்று, தீவிர உடல்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும், புதிய படம் ஒன்றின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில், சிம்புவுடன் நடிகர் கவுதம் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் நார்தன் இயக்கவுள்ளார். இவர் கன்னடத்தில் ஒருசில படங்கள் இயக்கியுள்ளார்.

சிம்புவின் 45வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தில் 20 - வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…