simbu and aniruth wish for dhanush power pandy
நடிப்பு, பாடல், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றி வாகை சூடி கோலிவுட்டில் வலம் வரும் தனுஷ் தற்போது 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகம் கொடுக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷின் முதல் இயக்கம், மற்றும் பாடல்கள் வெற்றிக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அவரது திரையுலக போட்டியாளரான சிம்பு தனது வாழ்த்துக்களை தனுஷூக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் 'சூரக்காத்து' பாடல் தன்னுடைய பேவரேட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போலவே தனுஷ் படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத்தும் 'பவர்பாண்டி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக அனிருத் மேல் ஏதோ கோபத்தில் உள்ள தனுஷ் அவரை விட்டு விலகி சென்றுகொண்டிருக்கிறார் . அறிமுக படுத்தியவரை மறக்காமல் அனிருத் ஒவ்வொரு முறையும் வலிய சென்று வாழ்த்துக்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மறைமுகமாக அவரை தாக்கி பேசிய சிம்பு தனுஷுக்கு பல நாட்கள் சென்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
