simbran pair with rajinikanth

'சன் பிச்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறாது.

ஏற்க்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது. ஜூன் மாதம் துவங்க உள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 90களில் முன்னணி நடிகையாக நடித்த நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடித்த 'காலா' திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இனி மகள் வயது உள்ள நடிகைகளுடன் தான் ஜோடி சேர போவதில்லை என கூறியதால், கார்த்தி சுப்புராஜ் ரஜினியின் வயதுக்கு ஏற்றப்போல் ஒரு கதாநாயகியை தான் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ரன் இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருந்தாலும், இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தது இல்லை.

ஒரு வேலை இந்தப்படத்தில் நடித்தால் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 21 வருடத்திற்கு பிறகு, கார்த்தி சுப்புராஜ் மூலம் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் கனவு நிறைவேரும் என்பது குறிப்பிடத்தக்கது.