ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.
மேலும் தமிழில் மற்றும் தெலுங்கில் விஜய், அஜித், பவன் கல்யான், மகேஷ்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்த்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் பாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டுள்ளனர், இதற்கு இவர் ‘பாலிவுட்டில் பணியாற்றுவது ஒரு நல்ல அனுபவம்.
அக்ஷய் குமாருடன் நடித்தது மிகவும் சிறந்த அனுபவம் என்றும் , ஆனால், இம்ரான் ஹஸ்மியுடன் நடித்தது தான் மிகவும் பயமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் பல படங்களில் நடித்து விட்டார், என்னுடைய இரண்டாவது பாலிவுட் படமே அவருடன் என்றபோது.
அவருடன் நடிக்கும் போது தான் எனக்கு பயமாக இருந்தது’ என கூறியுள்ளார்
