தமிழ், தெலுங்கு, இந்தி, என மாறி மாறி பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல்,  இசை ஆல்பம், மற்றும் பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் அவ்வப்போது, நட்சத்திர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு,  கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார்.  மேலும் இவர் மைக்கேல் கோர்சால் என்கிற வெளிநாட்டு நடிகரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் திடீர் என என்ன நடந்தது என தெரியவில்லை. ஸ்ருதிஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், காதலை முறித்து கொண்டதாக சூசகமாக தெரிவித்தார். அதே போல் அவருடைய காதலரும், இதனை உறுதி செய்யும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் ட்விட் போட்டார். 

இதனால் ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் பலர், என்ன ஆனது என பல முறை விசாரித்த போதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. இந்நிலையில் கருப்பு கலர் உடை அணிந்து முக்காடு போட்டவாறு End of day என பதிவிட்டு. worktime  என்கிற ஹாஷ்டாக் பதிவிட்டுள்ளார். இதில் இருந்து ஸ்ருதிஹாசன் இனி திரைப்படங்கள் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்த உள்ளார் என்பது தெரிகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

End of day. #workmode

A post shared by @ shrutzhaasan on Apr 27, 2019 at 5:37am PDT