நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ருதிஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார்.  இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ருதிஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இந்த படத்தில், இவர் யாருடன் நடிக்கிறார் என்கிற எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படத்தின் நாயகன் ராணா என கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரகாஷ் என்கிற இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, ராணாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த படம் சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.