நடிகர் சூர்யா நடித்த '7 ஆம் அறிவு' படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமலஹாசனின் மகள் என்கிற அடையாளத்தோடு இவர் நடிக்க வந்திருந்தாலும், தன்னுடைய திறமையால், கோலிவுட் திரையுலகை தாண்டி, டோலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் நடிப்பில், கடைசியாக தமிழில் சிங்கம் 3 படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, இசை ஆல்பம், மற்றும் மற்ற மொழி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும், படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. 

இது ஒருபுறம் இருக்க தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளாராம் நடிகை ஸ்ருதி ஹாசன். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் இவர் நடிக்கிறார்.

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹங்கேரியின் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் ஸ்ருதிஹாசன் விரைவில் கலந்து கொள்ள உள்ளார்.

ஹாலிவுட் சீரிஸில் எமி ஜாக்சன், மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது இந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு எங்க 15 வருடமா கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, த்ரிஷாவுக்கு கூட கிடைக்கல!