மீடூ பிரச்சனை எழுந்த போது பிரபலங்கள் முதல், சாதாரண வேலை செய்பவர்கள் என அனைவரும் திரையுலகிலும், அலுவலகங்களில் செய்த இடங்களிலும் எழும் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். 

இவர் நிபுணன் படத்தில் நடித்த போது, நடிகை ஸ்ருதி ஹரிஹரனுடன் தவறாக நடந்து கொண்டதாகவும். இயக்குனரிடம் வேண்டும் என்றே நெருக்கமான காட்சிகளை வைக்க சொன்னதாக கூறி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

இந்த பிரச்சனைக்கு பின், தனக்கு திருமணம்  ஆகிவிட்டதாக கூறினார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்நிலையில் இவர், தான் கர்ப்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இத்தனை நாள் திரையுலகின் பக்கம் வராமலேயே இருந்த இவர், தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.