’இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை ‘என்று மிகச் சமீபத்தில் பேட்டிகொடுத்த கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தான் பாட்டியாகும் காலத்தில் தனது பத்து பேரக் குழந்தைகள் உலகம் முழுக்க பரந்து வியாபித்து இருக்கவேண்டும்’என்ற விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடி கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் ஸ்ருதியிடம் 'உங்கள் திருமணம் எப்போது? திருமணத்தின் போது எங்களுக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்வோம்' என்று கூறியிருந்தார்.இந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாஸன், 'என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்' என்று  படு ஸ்போர்டிவாக பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வைரலாகிவரும் ஃபேஸ் ஆப் செயலி மூலம் தனது வயதான தோற்றத்தை வெளியிட்ட ஸ்ருதி,’இந்தத் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வயதில் எனக்கு பத்து பேரக் குழந்தைகள் இருக்கவேண்டும். அவர்கள் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரவேண்டும் என்றும் விரும்புகிறேன்’என்று பதிவிட்டிருக்கிறார்.