ரகசியமாக  நடிகை ஸ்ரேயா  திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் திரைத்துறையினரால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடைய காதல் கணவர் Andrei Koscheev பற்றி  பல தகவல் வெளியாகி உள்ளன.

ஸ்ரேயா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபின்,சில நாட்களுக்கு முன்னதாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தது  குறிப்பிடத்தக்கது

மேலும், நடிகை ஸ்ரேயாவின் காதல் கணவரான Andrei Koscheev  ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரர் என்பது மட்டும் தான் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம்

இந்நிலையில், Andrei Koscheev பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் ஒரு தொழிலதிபராம்.

 உணவில் அதிக ஆர்வம் கொண்ட இவர்,முதலில் சிறிய அளவில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.பின்னர் அதில் அதிக லாபம் கிடைத்ததை உணர்ந்த அவர், மேலும் பல முக்கிய இடங்களில்  தனக்கு சொந்தமான ஓட்டலின் கிளைகளை திறந்து உள்ளாராம்.

ஆக மொத்தத்தில்,விளையாட்டு வீரராக மட்டும் தெரிந்த ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev இனி ஒரு தொழிலதிபராகவும்  தெரிய உள்ளார்.