தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம் ஆகியோருக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் தான் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகிய பிறகும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் கடைசியாக நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்தார்.  தற்போது தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகும் இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் அவர் வெளிநாட்டில் நடைபெற்று வரும் கார்னிவல் பெஸ்டிவலில் பங்கேற்றுள்ளார். அப்போது பலர் இசைக்கருவிகள் இசைத்துக்கொண்டிருக்கும் போது, இவர் மட்டும் ஆட்டம் ஆடிக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவரை கிண்டலாக என்ன ஆச்சி ஸ்ரேயா திடீர் என்று உங்களுக்கு என்பது போல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை  283,684  பேர் இதுவரை இந்த பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோ இதோ: