Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாயத்து இல்லாம முருகதாஸ் படமா? இதோ ‘சர்கார்’ம் களவாண்ட கதையாம்!

ஏ.ஆர்.முருகதாஸ் தனது முதல் படத்திலிருந்தே பரபரப்பான பஞ்சாயத்துகளுக்குப் பேர் போனவர். அயல்நாட்டுப்படங்களிலிருந்தும், அடுத்தவர் கதைகளிலிருந்தும் உரிமையோடு கைவைத்து அசிங்கப்பட அவர் தயங்குவதே இல்லை.

shocking? sarkar movie story is theft story
Author
Chennai, First Published Oct 6, 2018, 1:24 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் தனது முதல் படத்திலிருந்தே பரபரப்பான பஞ்சாயத்துகளுக்குப் பேர் போனவர். அயல்நாட்டுப்படங்களிலிருந்தும், அடுத்தவர் கதைகளிலிருந்தும் உரிமையோடு கைவைத்து அசிங்கப்பட அவர் தயங்குவதே இல்லை.

இவர் விஜயுடன் இணைந்த ‘கத்தி’ படம் போலவே தற்போது ஆடியோ ரிலீஸான ‘சர்கார்’ படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த முறை களம் இறங்கியிருப்பவர் ஒரு உதவி இயக்குநர்.

shocking? sarkar movie story is theft story

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாம் முறையாக விஜய் நடித்துள்ள படம் ’சர்கார்’. இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில், வரலெட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா ஆகியோரும் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகிறது.

shocking? sarkar movie story is theft story

இந்நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறியுள்ளார். 'செங்கோல்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை 2007ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதனை திருடி உருவாக்கப்பட்டதே ‘சர்கார்’ படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இயக்குநர் பாக்கியராஜ், தலைமையிலான எழுத்தாளர் சங்கம் இதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளது.

shocking? sarkar movie story is theft story

படத்தின் ஆடியோ ரிலீஸாகி பாஸிடிவான செய்திகள் பரவிவரும் நிலையில் கதை களவாடப்பட்டது என்கிற அவமானச் செய்தியை ஏ.ஆர்.முருகதாஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios