Marakkar Movie: அட கடவுளே...அதற்குள் இப்படி ஆகிடுச்சே? உச்ச கட்ட அதிர்ச்சியில் 'மரைக்காயர்' படக்குழு..!

நடிகர் மோகன் லால் (Mohan Lal) நடிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் (Priya Dharshan) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மரைக்காயர்' (Marakkar Movie) திரைப்படம் திருட்டுத்தனமாக இணைதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

shocking marakkar movie released in online

நடிகர் மோகன் லால் நடிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மரைக்காயர்' திரைப்படம் திருட்டுத்தனமாக இணைதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில்,  மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படமான 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', திரைப்படம் நேற்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. பல விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இப்படத்தில் மோகன்லாலை தவிர, மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அர்ஜுன் சர்ஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: Vani Bhojan: காட்டுக்குள் தன்னந்தனியாக வாணி போஜன்! மிதமான மேக்கப் போட்டு நயன்தாராவையே ஓவர் டேக் செய்யுறாங்களே!

 

shocking marakkar movie released in online

மேலும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சுமார் 100 கோடி ரூபாய்க்கு ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது 'மரைக்காயர்' படத்தின் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Amala Paul: பிங்க் நிற சேலையில்.. முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி காட்டிய அமலா பால்! லேட்டஸ்ட் கிளிக்

 

shocking marakkar movie released in online

அதாவது  தமிழ்ராக்கர்ஸ், மூவி ருல்ஸ், டெலிகிராம் மற்றும் பிற வலைத்தளங்களில் இப்படம் திருட்டு தனமாக முழு எச்டி பதிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. UAE பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட அன்றே சுமார் 2.98 கோடி வசூல் செய்து கெத்து காட்டியது. இதன் மூலம் அதிகம் வசூலித்ததாக கூறப்பட்ட துல்கர் சல்மானின் குரூப் படத்தின் UAE வசூலை இப்படி முறியடித்தது குறிபிடித்தக்கது.

மேலும் செய்திகள்: Katrina Kaif - Vicky Kaushal: முன்னால் காதலர்கள் சல்மான் கான் - ரன்பீர் கபூரை திருமணத்திற்கு அழைக்காத கத்ரீனா?

 

shocking marakkar movie released in online

இப்படம் வெளியாவதற்கு முன்பே,  67வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் ஆகியவற்றிற்காக விருதுகளை பெற்றது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாகியுள்ளது உள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios