Actor Harish: பிரபல கன்னட நடிகர் கார் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரிஷ் யார்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் துணை நடிகர் தான் ஹரிஷ். 40 வயதே ஆகும் இவர், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து, பல்வேறு தடைகளை தாண்டி தனது முயற்சி மற்றும் ஆர்வத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். சிறிய கதாபாத்திரங்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக முக்கியமான வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார். இயல்பான நடிப்பு மற்றும் உணர்வு பூர்வமான நடிப்பு இவரை ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது.

கோர விபத்து: 

இந்த நிலையில் தான் இவர் நேற்று முன்தினம், தனது ஷூட்டிங் பணியை முடித்துக்கொண்டு குஷால்நகரிலிருந்து தனது சொந்த ஊரான ஹொசகோட்டைக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அவருடைய கார் தேசிய நெடுஞ்சாலை 275-ல், ஆனேகாடு அருகே வந்தபோது சாலையோரத்தில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் நிலைதடுமாறி வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், கார் வேகமாக மோதியதில் கார் முற்றிலும் நசுங்கியது. இந்த விபத்தில் நடிகர் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நம்ப முடியாத இழப்பு:

கன்னட திரைப்படங்களில் துணை நடிகராகவும், சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் பிரபலமான இவருடைய இழப்பு ரசிகர்களையும், பிரபலங்களையும் பேரதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. பல பிரபலங்கள் இவருடைய இழப்பை நம்பமுடியவில்லை என கூறி உருக்கமாக தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை:

மேலும் இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், குஷால்நகர் கிராமப்புற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.