பிரபல மலையாள இயக்குனர் விவேக் ஆர்யன் கடந்த 22 ஆம் தேதி விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம், மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதாகும் இயக்குனர் விவேக் ஆர்யன், தன்னுடைய மனைவி அமிர்தாவுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் சென்றுகொண்டிருந்த பாதையின் நடுவே நாய் ஒன்று திடீர் என வர, அதனை காப்பாற்றும் நோக்கத்தில், சடன் பிரேக் போட்டார்.

அப்போது திடீர் என எதிர்பாராத விதமாக விவேக் ஆர்யன் மற்றும் அவருடைய மனைவி அமிர்தா ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இயக்குனர் விவேக் ஆர்யனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை ஐசியூ - பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இவர் திடீர் என சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். இந்த தகவல் மலையாள திரையுலகில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் ஆர்யன், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஒருமையில் ஒரு சிரசம்' என்கிற படத்தை இயக்கினார். மேலும், பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான, திருஷ்யம், உள்ளிட்ட சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் ஒரு சில, குறும்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.