Asianet News TamilAsianet News Tamil

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்..! உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள்..!

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணிக்கு சுயநினைவு இன்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 :35 மணி அளவில் உயிரிழந்தார்.
 
shocking chinnakalaivanar actor vivek death
Author
Chennai, First Published Apr 17, 2021, 6:59 AM IST

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணிக்கு சுயநினைவு இன்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 :35 மணி அளவில் உயிரிழந்தார்.

59 வயதாகும் நடிகர் விவேக், நேற்று காலை 11 மணிக்கு,  மூச்சு பேச்சின்றி அவரது குடும்பத்தினரால், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இடதுபுற இதய குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக ஆஞ்சியோ செய்து அடைப்பை நீக்கிய பின்னரும்,  எக்மோ கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வந்தது.

shocking chinnakalaivanar actor vivek death

இவரது உடல்நிலை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சிம்ஸ் மருத்துவர், ராஜு சிவசாமியும், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனும் 24 மணி நேரமும் விவேக் உடல்நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும். மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

shocking chinnakalaivanar actor vivek death

இந்நிலையில் இன்று காலை 4 :35 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில், வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விவேக், தன்னுடைய வித்தியாசமான காமெடி மூலம் சமூக கருத்துகளையும் தொடர்ந்து மக்கள் மனதில் பதித்தவர். இதனாலேயே இவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என அணைத்து முன்னணி நடிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.

shocking chinnakalaivanar actor vivek death

2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.  நடிப்பைத் தாண்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது கொண்ட பற்றின் காரணமாக சுமார், ஒரு கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு தன்னுடைய சமூக பணியில் தொடர்ந்து ஆற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios