Asianet News TamilAsianet News Tamil

shivani Narayanan : கையில் வோட்கா உடன் ஹாப்பி மூடில் பிக்பாஸ் சிவானி - வைரலாகும் புகைப்படம்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் சிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 

shivani Narayanan instagram post viral
Author
Tamil Nadu, First Published Dec 6, 2021, 3:46 PM IST

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான சிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

shivani Narayanan instagram post viral

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

shivani Narayanan instagram post viral

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் சிவானி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவானி.

shivani Narayanan instagram post viral

அதன்படி சமீபத்தில் கையில் வோட்காவுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பதறவேண்டாம்.... வோட்கா என்பது அவர் புதிதாக வாங்கி உள்ள நாயின் பெயர். அந்த நாயை கையில் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை தான் சிவானி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios