பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இப்படி தான் என பார்வையாளர்கள் கணித்துவிட்டாலும், பாலாஜி மட்டும் சகபோட்டியாளர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறார்.

அவர் எந்த நேரத்தில் யாரை சப்போர்ட் செய்வார் என்றே தெரியாது. இவரை நம்பி சிலர் ஒரு காரியத்தில் இறங்கினால், அவர்களை எப்போது அசிங்கப்படுத்துவார் என்பதும் தெரியாது.  இது போன்ற சம்பவங்களை  பலமுறை பார்த்துவிட்டோம். 

இது இவரது தனித்துவமான ஸ்டேடர்ஜியா என்பதை கூட அவர் தான் கூற வேண்டும். ஆனால் இதுவரை ஷிவானியிடம் மட்டும் இவரது கோவம், ஆத்திரம், தந்திரம் போன்றவற்றை காட்டம் இருந்தார். 

முதல் முறையாக தற்போது இவர்களுக்குள் வெடிக்கும் பிரச்சனை பற்றிய வீடியோவில்... இருவரும் பாத்ரூம் அருகே பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஷிவானி சொன்னதை புரிந்து கொள்ளாமல் ஒரு வார்த்தையை விட பின்னர் ஷிவானி அதனை சுட்டிக்காண்பித்த பிறகு, சாரி கேட்டார்

இதைத்தொடர்ந்து ஷிவானியும் பாலாஜியும் நேருக்கு நேர் முகத்தை பார்த்து பேசி கொண்டிருக்கின்றனர்.  திடீரென பாலாஜி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இதனால் கடுப்பான ஷிவானி, ‘நான் பேசிக்கொண்டிருக்கும் போதே நகர்ந்து சென்றால் என்ன அர்த்தம்’ என்று கூறி ‘நீங்கள் பேசி கொண்டிருக்கும்போது நான் அதே மாதிரி சென்றால் எப்படி இருக்கும் என்று பாலாஜி பாணியிலேயே செய்து காட்டினார். இதனால் பாலாஜி கடுப்பாகிறார். 

50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒருவர் கூட பாலாஜியின் ஸ்டேடர்ஜியை புரிந்து கொண்டு அவரை வெறுப்பேற்றியது இல்லை, கத்தி சண்டை தான் போடுவார்கள். ஆனால் இது பாலாஜியை பெரிதாக பாதிக்கவும் செய்யாது. ஆனால் முதல் குறையாக பாலாஜி என்ன செய்தால் கடுப்பாவார் என அவருடைய பாணியே சென்று வெறுப்பேற்றியுள்ளது வேற லெவல்.


இதுகுறித்த புரோமோ இதோ...