ஆபாச படங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா குறித்த பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஆபாச படங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா குறித்த பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழில் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்துள்ளார். கணவர், குழந்தைகள் என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது, வெளிநாட்டு செயலுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப்படங்களை தயாரித்து விற்பனை செய்த விவகாரம். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் தற்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை துவங்கிய பின்னர், ராஜ் குந்த்ரா மீது, அடுத்தடுத்த பல மாடல்கள் மற்றும் நடிகைகள் புகார் கொடுத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதனை மறுத்து வந்த ஷில்பா ஷெட்டி கணவருக்கு நேராக இவரிடம் விசாரணை செய்த போது, கோவத்தில் கணவரை நன்கு திட்டி அங்கேயே பிரச்சனை செய்துள்ளார். பின்னர் போலீசார் தான் அவரை சமாதானம் செய்ததாக தகவல் வெளியானது.

ஆபாச பட விவகாரம் தொடர்பாக, மனதளவில் அதிருப்தியில் இருந்து வரும் ஷில்பா ஷெட்டி அவரது கணவரை பிரிய முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, நேற்றைய தினம் ஜாமீனில் வெளிவந்தார். இவர் மீது மும்பை காவல் துறையினர் சுமார் 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை சோதனை செய்த போது, சுமார் 119 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அதை 9 கோடிக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.