Asianet News TamilAsianet News Tamil

அடுத்த ரவுண்டுக்கு தயாரான ஷெரின்... ரசிகர்களை வாவ் சொல்ல வைக்கும் நியூ லுக்... வைரலாகும் போட்டோ...!

மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள ஷெரின் தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் ஷெரின் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மனதை கிறங்கடிக்க செய்துள்ளது. 

Sherin New Look Photo Going Viral In Social Media
Author
Chennai, First Published Nov 19, 2019, 1:32 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

Sherin New Look Photo Going Viral In Social Media

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரினின் தோற்றம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது. எப்படி நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்குமோ, அதே போலஷெரினின் உடல் எடையும் குறைய ஆரம்பித்தது. சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் செம்ம ஸ்லீம்மாக க்யூட்டாக காட்சியளித்தார். 

Sherin New Look Photo Going Viral In Social Media

மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள ஷெரின் தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் ஷெரின் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மனதை கிறங்கடிக்க செய்துள்ளது. ஷெரினின் நியூ லுக்கைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாவ் என வாய்பிளந்து நிற்கின்றனர்.கறுப்பு நிற உடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் ஷெரீனின் லேட்டஸ்ட் போட்டோ, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios