பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்தியவர்கள் பெயர்களை முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தெலுங்கு நடிகர்கள் நானி, விவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் ஆகியோர் இவரது செக்ஸ் புகாரில் சிக்கினர்.  

இப்போது தமிழ் திரையுலகினரை குறிவைத்துள்ளார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோரை சர்ச்சையில் இழுத்து இருக்கிறார். இது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

‘‘பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கையில் பயன்படுத்திவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறேன். பிரபலங்கள் அழைத்ததும் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கப்படுகிறது.  சினிமா என்பது கவர்ச்சி உலகம். அழகையே இங்கு முக்கியமாக பார்க்கிறார்கள். நான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறேன். உணவு, வாடகை மற்றும் வேறு செலவுகளுக்கு பணம் தேவைபடுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடன்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதால் ப்படி செய்தேன் எனச்சொன்னார் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை லதா நேற்று ஈரோடு சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர், சிவாஜி போன்ற அந்தக் காலங்களில் நடிப்புத் திறமை என்பது கடினமாக இருந்தது. ஆனால், தற்போது புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நடிப்பு சுலபமாக இருக்கிறது.

அதனால் புதுமுக நடிகர்கள் நடிப்புத் துறைக்கு துணிந்து வருகின்றனர். நடிப்பு மட்டுமின்றி எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு வேண்டும். எம்ஜிஆர், சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 20 தடவை படத்தைப் பார்த்தேன் என்று கூறுவார்கள். அதனால் படம் 250 நாட்கள் ஓடியது. ஆனால், இன்று 25 நாட்கள் ஓடினாலே வெற்றிப் படம் எனக் கூறுகின்றனர்” என்றார்.

மேலும் ஸ்ரீ ரெட்டி தொடர்பாக வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை லதா, “நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு. அப்படி இருக்கும்பட்சத்தில் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர்? எல்லாத் துறைகளிலும் இப்படி நல்லது கெட்டது என இரண்டுமே இருக்கும். திரைப்படத் துறையில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள்.  இது தவறு எனக் கூறியுள்ளார்.