நடிகர் ஷாருகானின் புதிய படத்தை பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தாலும், அவர் ஏனோ ஒரு சில காரணங்களுக்காக, புதிய படங்களின் வாய்ப்பையும் ஏற்காமல், ஒப்புக்கொண்ட படங்களின் ஷூட்டிங்கும் தாமதம் ஆகிக்கொண்டே போகிறது.

கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் 'ஜீரோ' திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடிக்க ஒப்புக்கொண்ட படமும் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஷாருக்கானின் புதிய படத்தின் தகவலுக்காக 2019 ஆண்டு முழுவதும் காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு, ஷாருகான் ஜனவரி மாதத்திலேயே புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

இது குறித்த சில ட்விட்டுகள் தற்போது சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகிறது. தங்களுக்கு பிடித்த நடிகரிடம் அன்பு கோரிக்கை வைக்கும் காலம் போய் இப்போது விதவிதமா மிரட்டுறாங்க ரசிகர்கள்...