கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா முழுமையாக மீண்டு விட்டதாக சந்தோஷம் அடைந்த சில நாட்களிலேயே  மீண்டும் தொற்று பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. வுனான் நகரில் உதயமான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைக்கிறது. இத்தாலி, ஈரான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!

இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த கொடிய வைரஸின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. 

ஒருபுறம் கொரோனா தொற்றில் இருந்து நாட்டை மிக்க உதவும் விதமாக ரத்தன் டாடா, அம்பானி, அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் கோடிகளில் வாரி வழங்கி வருகின்றனர். மற்றொருபுறம் கொரோனா சிகிச்சைக்கு உதவும் விதமான மகத்தான சேவை ஒன்றை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!

அதாவது மும்பையில் உள்ள தனது 4 மாடி கட்டிடம் ஒன்றை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையமாக வைத்துக்கொள்ளும் படி ஷாருக்கானும், அவரது மனைவி கெளரியும் மும்பை மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் உதவ முன்வந்த இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.