'தர்பார்' படத்தின் பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்து விட்ட நிலையில், அடுத்ததாக 'மாஸ்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.

பொதுவாக நடிகர்கள், திரைக்கு வரும் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுமே... எந்த ஒரு பாகுபாடும் இன்றி ரசிப்பார்கள். மேலும் படம் குறித்த ஏதேனும் அப்டேட் வந்தால், அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கும்.

அதன்படி சமீபத்தில் வெளியான, மாஸ்டர் படத்தின் 2 லுக் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படம் குறித்து அடிக்கடி ரசிகர்களுக்கு அப்டேட் கூறி வரும் ஷாந்தனுவிடம் நடிகர் பிரசன்னா "மச்சி மாஸ்டர் படம்  அப்டேட் பற்றி சொல்லுடா " என கேட்க அதற்கு, சாந்தனு  விஜய் மாஸ்டர் செகண்ட் லுக்கில் இருப்பது போன்றே... ஸ்மைலியை போட்டு பதில் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: உதயநிதியின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?