தென்னிந்திய திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பல்வேறு சேவைகள் மூலம் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தி வைத்திருப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவருடைய 40 வருட சேவையை பாராட்டி இவருக்கு மிகவும் பிரமாண்டமான விழா கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. 

இந்த விழாவில் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் தே.மு.தி.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டு விஜயகாந்த் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்:

இந்நிலையில் நடிகரும், கேப்டன் விஜயகாந்தின் மகனுமான சண்முகப்பாண்டியன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அங்கிருந்த படியே தன்னுடைய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். 

கண்கள் டாட்டூ:

மேலும் தன்னுடைய தந்தையின் கூர்மையான கண்களை தன்னுடைய கையில் டாட்டூ குத்தியுள்ளார். 

வாழ்த்து:

இதுகுறித்து அந்த வீடியோவில் கூறியுள்ள சண்முகப்பாண்டியன்... "அப்பாவின் 40 ஆண்டு கலைவிழாவில் கலந்துக் கொள்ள முடியாததற்கு வருத்தப்படுகிறேன்... எனக்கு தெரிந்தவரை அப்பா மட்டும் தான் தமிழில் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல நடிகர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளனர்.

ஆனால் அப்பாவை பொறுத்தவரையில் அனைவருக்கும் பிடித்த விஷயமே அவருடைய கண்கள் தான். எனவே அவருடைய கண்களை நான் என்னுடைய கையில் டாட்டூவாக வரைந்துள்ளேன். இதனால் அவருடைய கண்கள் நான் உயிருள்ளவரை என்னுடன் இருக்கும் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

மேலும் இந்த டாட்டூவை நான் லண்டனில் உள்ள மிகப்பெரிய டாட்டூ கலைஞரிடம் போட்டதாகவும் அவரே இந்த கண்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்ததாக சண்முகப்பாண்டியன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.