Shahrukh Khan got the name the for his movie after one year
ஷாருக் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் வெளியானது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலி.
வித்தியாசமான கதையம்சங்கள் மூலம் தனது படங்களுக்கு ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இவர் படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களைக் கொண்டு வெளியாகி, வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
கடைசியாக ரன்பீர் கபூர் - தீபிகா படுகோனே நடிப்பில் தமாஷா படத்தை இயக்கி வசூல் வேட்டையாடினார்.
இந்நிலையில் தற்போது ஷாரூக்கானை இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்து வருகிறார்.
காதல் படமாக உருவாகிய இப்படத்திற்கு, கடந்த ஓராண்டாக பெயர் வைக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
தற்போது ’ஜாப் ஹேரி மெட் செஜல்’ (jab Harry met Sejal) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளின் வரைபடத்தை பின்புலமாகக் கொண்டு, ஷாருக் - அனுஷ்கா ஆகிய இருவரும் நடன அசைவில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகிறதாம்.
